கூட்டுறவு சங்கத் தேர்தல் பிப்ரவரி 3ஆம் தேதி நடைபெறும் என்று தமிழ்நாடு கூட்டுறவு சங்கங்களின் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
ஐந்தாண்டுகள் பதவிக்காலம் முடிவுறும் கூட்டுறவு சங்கங்கள், புதிதாக பதிவுசெய்யப்பட்ட சங்கங்கள் மற்றும் தேர்தல் நிறுத்தப்பட்டிருந்த சங்கங்களுக்கான தேர்தல் தேதியை தமிழ்நாடு கூட்டுறவு சங்கங்களின் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதன்படி பால் உற்பத்தி மற்றும் பால்பண்ணை மேம்பாட்டுத்துறையின் கீழ் செயல்படும் கூட்டுறவு சங்கங்கள், கூட்டுறவுத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கூட்டுறவு ஒன்றியங்கள், கூட்டுறவு அச்சகங்கள் உட்பட மொத்தம் ஆயிரத்து 28 சங்கஙகளுக்கு தேர்தல் நடத்தப்பட உள்ளது. 11 ஆயிரத்து 368 நிர்வாகக்குழு உறுப்பினர்களுக்கான தேர்தலில், 3 ஆயிரத்து 102 இடங்கள் பெண்களுக்கும், 2 ஆயிரத்து 68 இடங்கள் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கும் ஒதுக்கப்பட்டுள்ளது.
இதற்கான வேட்பு மனுத்தாக்கல் வரும் 27, 28 ஆகிய தேதிகளில் செய்யலாம்,என்றும் மனுக்களை திரும்பப்பெற 29ஆம் தேதி கடைசி நாள் என்றும்.அன்றைய தினமே இறுதி பட்டியல் வெளியிடப்படுமென்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.தொடர்ந்து வாக்குப்பதிவு பிப்ரவரி 3ஆம் தேதியும் வாக்கு எண்ணிக்கை 4 தேதி நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.