சந்தோஷ நிகழ்வாக இருந்தாலும் சரி, துக்க நிகழ்வா இருந்தாலும்சரி, பொது இடங்கள்ல தன்னோட குணாதிசயத்த எதுக்காகவும் மாத்திக் கொள்ள மாட்டாரு எங்க அண்ணன் என்று உபிஸ், அகராதியுடன் சொல்வதை ஒப்புக் கொள்ளத்தான் வேண்டும் பொன்முடி விஷயத்தில்.
உயர்கல்வித்துறை அமைச்சர் என்ற மதிப்புக்குரிய பதவியில் இருந்தாலும் சரி, பேராசிரியர் என்னும் உயர்ந்த நிலையில் பார்க்கப்பட்டாலும் சரி, தான் அதற்கெல்லாம் கொஞ்சம் கூட பொருத்தமானவன் இல்லை பொன்முடியின் அவசரகுடுக்கை நன்னடத்தைகளும் வெளிச்சம் போட்டு காட்டிக் கொண்டிருக்கின்றன…
விடியா ஆட்சியின் காவல்துறை கட்டுப்படுத்த தவறிய கள்ளச்சாராயம், விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் பகுதியில் பாதிப்புகளை ஏற்படுத்த, புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் உறவினர்களை சந்தித்து, ஆறுதல் சொல்லச் சென்ற இடத்திலும், தனது சில்லுண்டித்தனத்தை வெளிக்காட்டியிருக்கிறார் பொன்முடி…
முழுப் பூசணியை சோற்றில் மறைப்பது போல, உயிரிழந்தவர்கள் குடித்தது கள்ளச்சாராயமா என்பது குறித்து ஆய்வு செய்துவருவதாக அவர் தெரிவித்தது அங்கிருந்தவர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது.
விடியா ஆட்சியில் நடைபெறும் சாராய வியாபாரத்தைச் சுட்டிக்காட்டி செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல் ஆவேசமானவர், செய்தியாளர்களை ஒருமையில் பேசியும், மைக்கை தட்டிவிட்டு, தனது கார் எங்கு நிற்கிறது என்பது கூட தெரியாமல் அங்கிருந்து சென்றுள்ளார். அதே போல, மரக்காணம் காலனி பகுதியில் மருத்துவமனை சரியில்லை என முறையிட்ட இளைஞரிடம் நீ ஓட்டு போட்டியா என அமைச்சர் பொன்முடி கேட்டுள்ளார்.
பொன்முடி என்றாலே சர்ச்சை என்பது தற்போது இந்த சம்பவத்திலும் நிரூபணமாகி உள்ளது. பெண்களை ஓசி டிக்கெட் என்று அழைத்தது, பெண் பஞ்சாயத்து தலைவியை சாதியை சொல்லிப் பேசியது, நீங்க எல்லாம் எங்களுக்கு ஓட்டு போட மாட்டீங்க என்று பொதுமக்களை குற்றம் சாட்டியது என்று பொன்முடிமீது வரிசை கட்டிய சர்ச்சையின் தொடர்ச்சியாகவே இந்த சர்ச்சையும் பார்கப்படுகிறது.
ஏற்கனவே பொன்முடியின் செயலால் தூக்கம் இழந்திருக்கும் முதலமைச்சர் ஸ்டாலின், இதுபோல் தொடர்ச்சியாக பொன்முடி அரங்கேற்றும் சர்ச்சையால் நிரந்தரமாகவே தூக்கத்தை தொலைத்து விடுவாரோ என்று ஊபிஸ்களே பொன்முடி விஷயத்தில் அச்சமுகம் காட்டுகிறார்கள். அதே நேரத்தில், நீக்கப்பட்ட பால்வளத்துறை அமைச்சர் ஆவடி நாசரை காட்டிலும், சர்ச்சைகளில் நான் சளைத்தவன் இல்லை என்று, பொன்முடி தன் செய்கைகளால் தெரிவித்து வந்த போதிலும், அவரது பதவியை பிடுங்கி தனது தூக்கத்தை காத்துக் கொள்ள ஸ்டாலின் தயக்கம் காட்டுவது ஏன் என்னும் கேள்வியும் அறிவாலயச் சுவர்களில் எதிரொலிக்கிறது.
Discussion about this post