கொரேனா தொற்று இரண்டாம் அலையில் சிக்கி உயிரிழந்த 4 ஆயிரத்து 500 பேரின் பெயர்கள் விடுப்பட்டுள்ளதாக டெல்லி அரசு தெரிவித்துள்ளது.
டெல்லியில், இரண்டாம் கட்டத்தை தாண்டி மூன்றாம் கட்ட கொரோனா பரவல் இருப்பதாக முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அண்மையில் தெரிவித்திருந்தார். இந்நிலையில், டெல்லியில் கொரோனா தொற்று இரண்டாம் அலையில் சிக்கி உயிரிழந்த 4 ஆயிரத்து 500 பேரின் பெயர்கள், அரசின் பதிவேட்டில் இருந்து விடுபட்டுள்ளது. ஏப்ரல் 18 முதல் மே 11 வரையிலான இறப்பு எண்ணிக்கை புள்ளி விவரங்களுடன், இறுதிச் சடங்கு செய்தவர்களின் எண்ணிக்கை ஒப்பிடும்போது, இந்த முரண்பாடு இருப்பது தெரியவந்துள்ளதாக டெல்லி அரசு கூறியுள்ளது. கடந்த 24 நாட்களில் ஒரு மணிநேரத்திற்கு 22 பேர் என நாள் ஒன்றுக்கு 534 இறுதிச் சடங்குகள் செய்வதற்கு பதிவு செய்தனர். இருப்பினும், டெல்லி அரசின் பதிவேட்டில், தினசரி 335 கொரோனா இறப்புகள் மட்டுமே பதிவு செய்யப்பட்டுள்ளன.