காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் இருந்து வந்த சர்ச்சை முடிவுற்றது

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் வடகலை, தென்கலை பிரிவினர் இணைந்து ஒன்றாக பிரபந்தங்கள் பாடவேண்டும் என்ற உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு அமலுக்கு வந்தது..

உலகப் பிரசித்தி பெற்ற காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் உள்ள மூலவர், உற்சவர்,
சன்னதியில்  நாலாயிர திவ்வியபிரபந்தங்கள் பாடுவதில் வடகலை, தென்கலை  ஆகிய இரு பிரிவினரிடையே மோதல் நிலவி வந்தது. இது தொடர்பான வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில், இரு பிரிவினரும் இணைந்து கோவிலில் பிரபந்தங்கள் பாடவேண்டும் என நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியன் சில தினங்களுக்கு முன் தீர்ப்பளித்தார்.  மேலும், இந்த தீர்ப்பை  மார்ச் 1 ஆம் தேதி முதல் அமல்படுத்த
கோவில் நிர்வாகத்திற்கும்,  காவல்துறைக்கும் அவர் உத்தரவிட்டிருந்தார். அதன்படி தேவராஜ பெருமாள் கோவிலில் உள்ள மூலவர் சன்னதி முன்பு வடகலை, தென்கலை  பிரிவினர்கள்  ஒன்றாக அமர்ந்து  நித்யபடி திவ்ய பிரபந்தங்களை எவ்வித சர்ச்சையும் இன்றி சுமுகமாக பாடி பெருமாளை வணங்கி சென்றனர்.

Exit mobile version