மழையில் நனைந்து வீணான நெல் மூட்டைகளை விவசாயிகளே திரும்ப எடுத்துச் செல்ல அதிகாரிகள் கூறியதால் சர்ச்சை

விழுப்புரம் அருகே மழையில் நனைந்து சேதமடைந்த நெல் மூட்டைகளை கொள்முதல் நிலையத்தில் இருந்து எடுத்துச் செல்லுமாறு அதிகாரிகள் கூறியிருப்பது விவசாயிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

விழுப்புரம் மாவட்டத்தில் பெய்த கனமழையால், காணைகுப்பத்தில் உள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில், திறந்த வெளியில் வைக்கப்பட்டிருந்த 15 ஆயிரம் நெல் மூட்டைகள் நனைந்து வீணானது.

மேலும் நெல்மணிகள் முளைப்பு தட்டியதால் நெல் மூட்டைகள் அனைத்தும் முழுவதுமாக சேதமடைந்துள்ளன.

கொள்முல் நிலையத்ல் நெல் மூட்டைகளை பாதுகாக்க போதுமான வசதி இல்லாததே இதற்கு காரணம் என்று விவசாயிகள் புகார் தெரிவித்திருந்தனர்.

இது குறித்து நியூஸ் ஜெ தொலைக்காட்சியில் செய்தி வெளியான நிலையில், மண்டல நுகர்பொருள் வாணிப கழகத்தின் செயலர் ஷீலா தலைமையிலான அதிகாரிகள், கானைகுப்பம் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டனர்.

நெல் மூட்டைகள் முழுவதுமாக சேதம் அடைந்திருப்பதை பார்த்த அதிகாரிகள், நெல் மூட்டைகளை விவசாயிகள் தங்கள் வீடுகளுக்கு கொண்டு செல்லுமாறு கூறியுள்ளனர்.

இதனால் அதிகாரிகளுடன் விவசாயிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.

கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்து வீணா நிலையில் விவசாயிகளே அதனை திரும்ப எடுத்துச் செல்லுமாறு கூறி இருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.

கொள்முதல் செய்துள்ள நெல் மூட்டைகளையும், கொள்முதல் செய்வதற்காக வைக்கப்பட்டிருந்த நெல் மூட்டைகளையும் பாதுகாப்பாக வைக்க கட்டிடம் இல்லாததால் இவ்வாறு ஏற்படுவதாக விவசாயிகள் வேதனை தெரிவித்தனர்.

மழையில் நெல் மூட்டைகளுக்கு சேதமடைந்ததால் ஏற்பட்டுள்ள நஷ்டத்தை அரசு வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளனர்.

Exit mobile version