திமுக அமைச்சர்களை தொடர்ந்து சர்ச்சையில் சிக்கிய காங்கிரஸ் எம்எல்ஏ

திமுக அமைச்சர்களைத் தொடர்ந்து, காங்கிரஸ் கட்சி சட்டமன்ற உறுப்பினர் ஒருவர், கட்சி அலுவலகத்துக்கு அரசு மருத்துவப் பணியாளர்களை அழைத்த சம்பவம், சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் நினைவு தினத்தையொட்டி, கொரோனா காலத்தில் முன்கள வீரர்களாக பணியாற்றும் மருத்துவர்கள், செவிலியர்கள், தூய்மைப் பணியாளர்களை கவுரவிக்கும் நிகழ்ச்சி, விருதுநகர் மாவட்டம் சிவகாசி தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏ அசோகன் தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு, சிவகாசி அரசு மருத்துவமனையில் பணிபுரியும் அரசு மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள், சிவகாசி மற்றும் திருத்தங்கல் நகராட்சிகளில் பணிபுரியும் தூய்மைப் பணியாளர்கள் ஆகியோர் காங்கிரஸ் கட்சி அலுவலகத்திற்கு வரவழைக்கப்பட்டனர்.

அரசு அலுவலர்களை சந்திக்க அவர்கள் பணிபுரியும் இடத்திற்கு செல்லாமல், அவர்களை கட்சி அலுவலகத்திற்கு அழைத்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Exit mobile version