மேட்டூரை அடுத்துள்ள கொளத்தூரில் தொடர் மழை காரணமாக 4 ஆண்டுகளுக்குப் பின் சிவிலிக்கரடு ஏரி நிரம்பியதால், விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர்.
சேலம் மாவட்டம் மேட்டூரை அடுத்த கொளத்தூர் அமைந்துள்ள செம்மலை சிவிலிக்கரடு ஏரி, தமிழக அரசின் குடிமராமத்து திட்டத்தின் கீழ் 22 லட்சம் ரூபாய் செலவில் தூர்வாரப்பட்டது. இந்த நிலையில், தற்போது பெய்த தொடர் மழை காரணமாக 4 ஆண்டுகளுக்கு பின் ஏரி நிரம்பி, உபரி நீர் வழிந்தோடி வருகிறது. இதனால் ஏரியை சுற்றியுள்ள பகுதிகளில் பொதுமக்களின் குடி நீர் தேவைகள் பூர்த்தியாவதோடு, நிலத்தடி நீர்மட்டம் உயரும் என்பதால் விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.