நீலகிரி மாவட்டத்தில் நான்காவது நாளாக தொடர்ந்து, கனமழை பெய்து வருவதால், விவசாய பயிர்கள் தண்ணீரில் முழ்கி உள்ளன.
நீலகிரி மாவட்டம் , பந்தலூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான பாடந்துரை, இரண்டாவது மயில், கொக்ககாடு போன்ற பகுதிகளில் கனமழை தொடருவதால், விவசாய பயிர்கள் வெள்ளத்தில் மூழ்கி உள்ளன. சாலைகளிலும் மழை நீர், குளம் போல் தேங்கி வருவதால், பொதுமக்கள் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். இதனிடையே, ஓரிரு மாதங்களில் அறுவடைக்கு தயாராக இருந்த இஞ்சி மற்றும் வாழை மரங்கள் கனமழையால் அழுகும் நிலை ஏற்பட்டுள்ளது. இப்பகுதியிலுள்ள நீர்நிலைகளை அரசு தூர் வார நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.