திமுகவினர் இடையே தொடரும் உட்கட்சி பூசல் – வைரலாகும் வீடியோ!

திமுகவினர் இடையே அடிக்கடி உட்பூசல் அரங்கேறி வரும் நிலையில், வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த திமுக பேச்சாளரான குடியாத்தம் குமரன், திமுக பொதுச்செயலாளர் துரைமுருகனை குறித்து வெளியிட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

குடியாத்தம் குமரன் வெளியிட்டுள்ள அவரது முகநூல் காணொலியில், ஸ்டாலின் அவர்களே கட்சியின் பொதுச்செயலாளர் கழகத்திற்கு துரோகம் செய்த துரைமுருகனையும் அவருடைய மகன் கதிர்ஆனந்தையும் தயவுசெய்து நம்பாதீர்கள் என்று தெரிவித்துள்ளார். மேலும், அவர்கள் இருவரும் தங்களுக்கும் கழகத்திற்கும் துரோகிகள் சகுனிகள் என்பதால் அவரிடம் கவனமுடன் இருங்கள் என்றும் கூறியுள்ளார்.

மு. க. அழகிரி கட்சி துவங்கப் போவது குறித்த அறிவிப்பு, 2 ஜி ஊழல் வழக்கு உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகள், திமுக தலைவர் ஸ்டாலினுக்கு அழுத்தம் கொடுத்து வருகிறது. இந்நிலையில், தொடர்ந்து அதிகரித்து வரும் உட்கட்சிப் பூசலால், வரும் சட்டமன்ற தேர்தலுக்கு முன், திமுகவில் பல்வேறு பிளவுகள் ஏற்படும் என கூறப்படுகிறது.

Exit mobile version