தொடர்ந்து குறைந்துவரும் பெட்ரோல், டீசல் விலை : வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி

பெட்ரோல் விலை கடந்த 2 மாதங்களில் 15 சதவிகிதம் வரை குறைந்துள்ளதால் வாகன ஓட்டிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். பெட்ரோல் மற்றும் டீசல் விலை கடந்த 2 மாதங்களாக தொடர்ந்து குறைந்து வருகிறது. சென்னையில் நேற்று 73 ரூபாய் 57 காசுகளுக்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு லிட்டர் பெட்ரோல் 24 காசுகள் குறைந்து 73 ரூபாய் 33 காசுகளுக்கு இன்று விற்பனை செய்யப்படுகிறது.

இதேபோல நேற்று லிட்டர் ஒன்றுக்கு 69 ரூபாய் 19 காசுகளுக்கு விற்கப்பட்ட டீசல், 26 காசுகள் குறைந்து 68 ரூபாய் 93 காசுகளுக்கு விற்பனையாகிறது. பெட்ரோல் மற்றும் டீசல் விலை தொடர்ந்து குறைந்து வருவது வாகன ஓட்டிகளை மகிழ்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.

Exit mobile version