ஜம்மு பிராந்தியத்தில் 4வது நாளாக தொடரும் ஊரடங்கு உத்தரவு

ஜம்மு பிராந்தியத்தில் 4வது நாளாக ஊரடங்கு உத்தரவு தொடர்வதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

புல்வாமா மாவட்டத்தில் பயங்கரவாதிகள் நிகழ்த்திய தற்கொலை படை தாக்குதலில் சிஆர்பிஎப் வீரர்கள் வீர மரணமடைந்ததை தொடர்ந்து ஜம்மு பிராந்தியத்தில் பதற்றமான சூழல் உருவானது. இதனையடுத்து அங்கு பாதுகாப்பு படையினர் அதிகளவில் குவிக்கப்பட்டு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது. மேலும் பொதுமக்கள் யாரும் வெளியில் வர வேண்டாம் என்று அறிவுறுத்திருப்பதுடன் பாதுகாப்பை அதிகரித்துள்ளனர். இந்தநிலையில் 4வது நாளாக இன்றும் ஊரடங்கு உத்தரவு தொடர்வதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே பதற்றம் தணிந்தவுடன் விரைவில் ஊரடங்கு உத்தரவு தளர்த்திக் கொள்ளப்படும் என்று உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனிடையே, பிரிவினைவாத தலைவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த பாதுகாப்பை திரும்ப பெற மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

Exit mobile version