சீனாவின் புதிய ஒப்படைப்பு மசோதா எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களால் நாடெங்கும் பதற்றம் நிலவி வரும் நிலையில், ஹாங்காங் தீவில் காவலர்களுக்கும் ஆர்பாட்டக் காரர்களுக்கும் இடையே பெரும் கலவரம் ஏற்பட்டது…
சீனாவில் கொண்டுவரப்படவுள்ள புதிய ஒப்படைப்பு மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து, ஹாங்காங் நகரம் முழுக்க ஆர்ப்பாட்டங்கள் நடந்து வருவதால் , பதற்றமான சூழ்நிலை உருவாகி உள்ளது. இந்நிலையில், வணிக வளாகம் ஒன்றில் ஆக்கிரமித்த போராட்டக்காரர்களுடன் காவல்துறையினர் மோத வேண்டிய சூழல் ஏற்பட்டது. இதில், இரு தரப்பிலும் பலர் காயமடைந்த நிலையில், ஏராளமானோர் கைது செய்யப்பட்டனர். இதனையடுத்து அரசாங்கம் இந்த மசோதாவின் சட்டமன்ற செயல்பாடுகளை நிறுத்திவைத்ததோடு, ஹாங்காங் தலைமை செயல் அதிகாரி கேரி லாம் இந்த ஒப்படைப்பு மசோதா சர்ச்சைக்காக, மக்களிடம் பகிரங்க மன்னிப்பும் கேட்டார். எனினும் முழுமையான தீர்வு, கைது செய்யப்பட்டவர்களை விடுவித்தல், காவலர்களின் நடவடிக்கைக்கு நீதி விசாரணை ஆகியவற்றை போராட்டக்காரர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.