குல்காம் மாவட்டம் லர்னூ கிராமத்தில் தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாக தகவல் கிடைத்ததை தொடர்ந்து, பாதுகாப்பு படையினர் அந்த இடத்தை சுற்றி வளைத்தனர். அப்போது வீரர்களை நோக்கி தீவிரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தினர்.
இதில் ராணுவ வீரர் ஒருவர் காயமடைந்தார். பலமணி நேரம் நீடித்த கடும் சண்டையில் தீவிரவாதிகள் 3 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். மற்றவர்களை வேட்டையாடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.