நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வு கருத்தரங்கம் – ஆளுநர் சிறப்புரை

சென்னை நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வு கருத்தரங்கில், ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர்.

சென்னை அண்ணாநகரில், இந்திய பொது நிர்வாக நிறுவனத்தின் கிளை சார்பில், நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வு என்ற தலைப்பில் 2 நாள் கருத்தரங்கம் நடைபெறுகிறது. ஆளுநர் பன்வரிலால் புரோகித் இந்த கருத்தரங்களை தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் ஏராளமான மாணவ,மாணவிகள் கலந்துகொண்டனர். இன்றைய கருத்தரங்கில் நுகர்வோர் பாதுகாப்பு முன்னேற்றம், நுகர்வோர் பற்றிய காந்தியடிகளின் சிந்தனைகள் ஆகியவை குறித்து விவாதிக்கப்பட்டது. அப்போது பேசிய ஆளுநர் புரோஹித், நுகர்வோர் ஏமாற்றப்படுவதைத் தடுக்க, வியாபாரிகளிடம் பொருட்களை பேரம் பேசி வாங்க வேண்டும் என்றார்.

Exit mobile version