மேட்டூர், அமராவதி அணைகளின் நீர் அளவீடுகள் குறித்த தொழில் நுட்ப ஆலோசனைக் கூட்டம், மேட்டூரில் உள்ள பொதுப்பணித்துறையினர் அலுவலகத்தில் நடைபெற்றது.
காவிரி தொழில் நுட்பக்குழு தலைவர் சுப்பிரமணியம் தலைமையிலான குழுவினர், சேலம் மாவட்டம் மேட்டூர் அணையின், 16 கண் உபரி நீர் போக்கி, கவர்னர் வியூ பாயிண்ட், சுரங்கப்பாதை, கால்வாய் உள்ளிட்ட பகுதிகளை ஆய்வு செய்தனர். பின்னர் பொதுப்பணித் துறை அலுவலகத்தில், மேட்டூர், அமராவதி உள்ளிட்ட அணைகளின் நீர்வரத்து, நீர் வெளியேற்றம், தேக்கி வைக்கப்பட்டுள்ள நீரை எவ்வாறு கணக்கீடு செய்ய வேண்டும் ஆகியவை குறித்து ஆலோசனை வழங்கினர். மேலும் தற்போதுள்ள நீர் மட்டம் குறித்தும், கர்நாடகம் வழங்கிய நீர் மற்றும் பாசனத்திற்கு வழங்கப்பட்டுள்ள நீர் குறித்தும் விவாதிக்கப்பட்டது.