கடன் தவணைகளுக்கான அவகாசத்தை நீட்டிப்பது குறித்து ரிசர்வ் வங்கியுடன் ஆலோசனை

வங்கிக் கடன் மறுசீரமைப்பு குறித்து ரிசர்வ் வங்கியுடன் நிதியமைச்சகம் தொடர்ந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருவதாக, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். ஃபிக்கி நிர்வாகக்குழு கூட்டத்தில் பேசிய அவர், ஊரடங்கு காலத்தில் சுற்றுலா உள்ளிட்ட துறைகள் எதிர்கொண்டு வரும் பிரச்னைகளை மத்திய நிதியமைச்சகம் கருத்தில் கொண்டுள்ளது என கூறினார். பல்வேறு துறைகள் வங்கிகளில் இருந்து பெற்ற கடன்களுக்கான தவணைகளை செலுத்துவதற்கான அவகாசத்தை மேலும் நீட்டிப்பது தொடர்பாகவும், கடன்களை மறுசீரமைப்பு செய்வது குறித்தும் நிதியமைச்சகம் தொடர்ந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறது என்றும் அவர் தெரிவித்தார். ஊரடங்கு காரணமாக, வாடிக்கையாளர்கள் பெற்ற கடன்களுக்கான மாதத் தவணைகளை செலுத்துவதற்கான அவகாசத்தை, ஆகஸ்ட் 31ம் தேதி வரை ரிசர்வ் வங்கி நீட்டித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version