எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ் படிப்பில் சிறப்பு பிரிவினருக்கு கலந்தாய்வு

சென்னையில் தொடங்கிய MBBS மற்றும் BDS மருத்துவ படிப்புகளுக்கான கலந்தாய்வு கூட்டத்தில், விளையாட்டு பிரிவு மாணவர்ளுக்கான இடங்களை அடுத்த ஆண்டுக்குள் அதிகரிக்க வேண்டும் என கோரிக்கை எழுந்தது.

சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் தொடங்கிய MBBS மற்றும் BDS மருத்துவப்படிப்புகளுக்கான கலந்தாய்வு கூட்டத்தின் முதல் நாளில், சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வு நடைபெற்றது.

இதில், மாற்றுத்திறனாளிகள் பிரிவுக்கு மொத்தமுள்ள 222 இடங்களுக்கு 76 பேர் விண்ணப்பித்ததில், 52 பேரும், விளையாட்டு வீரர்கள் பிரிவில் 152 பேர் விண்ணப்பித்ததில், 18 பேரும் கலந்தாய்வுக்கு அழைக்கப்பட்டனர்.

ராணுவ வீரர்கள் வாரிசுகள் பிரிவில், மொத்தம் 360 பேர் விண்ணப்பித்ததில் 19 பேர் அழைக்கப்பட்டனர். கலந்தாய்வின்போது, விளையாட்டு பிரிவு மாணவர்ளுக்கான இடங்களை, அடுத்த ஆண்டுக்குள் அதிகரிக்க வேண்டும் என மாணவர்கள் மற்றும் பெற்றோர், அரசுக்கு கோரிக்கை விடுத்தனர்.

28 மற்றும் 29 தேதிகளில் நடைபெறும் அரசு பள்ளிகளில் படித்த மாணவர்களுக்கான 7புள்ளி 5 சதவீத உள் ஒதுக்கீட்டுக்கான கலந்தாய்வில், 650 பேர் அழைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version