கிருஷ்ணகிரியில் சொந்த செலவில் மழைநீர் சேமிப்பு மாதிரி கட்டடம்

பேரூராட்சி செயல் பொறியாளர் ஒருவர் தனது சொந்த செலவில் மழைநீர் சேமிப்பு குறித்த மாதிரி கட்டிடத்தை உருவாக்கியுள்ளார்.

கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டினம் பேரூராட்சியில் செயல் அலுவலராக பணிபுரிந்து வரும் மலர்மாறன் என்பவர் தனது சொந்த செலவில் மழைநீர் சேகரிப்பு குறித்த மாதிரி கட்டமைப்பை உருவாக்கியுள்ளார். சுமார் 8 அடி உயரமும் நான்கடி அகலமும் கொண்ட இந்த மாதிரி கட்டிடம் பல்வேறு வண்ணங்களிலும் அலங்கார விளக்குகளை கொண்டும் உருவாக்கப்பட்டுள்ளது. மாதிரி கட்டிடத்தை அப்பகுதி மக்கள் மற்றும் பள்ளி கல்லூரி மாணவர்கள் ஆர்வத்துடன் பார்வையிட்டு செல்கின்றனர். அனைவருக்கும் எளிமையாக புரிந்து கொள்ளும் வகையில் அமைக்கப்பட்டுள்ளதாக மாணவர்கள் தெரிவித்துள்ளனர்…

Exit mobile version