தமிழ்நாட்டில் கட்டுமான பொருட்களின் விலை மற்ற மாநிலங்களை விட அதிகமாக இருப்பது கட்டுமான தொழிலை பெருமளவு பாதித்துள்ளது. இந்நிலையில் என்னென்ன பொருட்கள் எவ்வளவு விலை உயர்ந்துள்ளன என்பதைக் கீழ்கண்ட பட்டியலில் காணலாம்.
ஒரு மூட்டை சிமெண்ட் ரூ.370 ஆக இருந்த நிலையில் ரூ. 520க்கு விற்பனை செய்யப்படுகிறது.
எம்- சாண்ட் ஒரு யூனிட் – ரூ.5000 ஆக இருந்த நிலையில் ரூ.6000க்கு விற்பனை செய்யப்படுகிறது.
ஒன்றரை அங்குல ஜல்லி (ஒரு யூனிட்) – ரூ.3400ஆக இருந்த நிலையில் ரூ.3900க்கு விற்பனை செய்யப்படுகிறது.
முக்கால் அங்குல ஜல்லி (ஒரு யூனிட்) – ரூ. 3600ஆக இருந்த நிலையில் ரூ.4,100க்கு விற்பனை செய்யப்படுகிறது.
கட்டுமான கம்பி (ஒரு டன்) ரூ.68,000 ஆக இருந்த நிலையில் ரூ.75000க்கு விற்பனை செய்யப்படுகிறது.
செங்கல் ஒரு லோடு (ஒரு யூனிட்) – ரூ.18000ஆக இருந்த நிலையில் ரூ.24000க்கு விற்பனை செய்யப்படுகிறது.