ராஜஸ்தானில் ஆட்சி அமைக்கிறது காங்கிரஸ்

பா.ஜ.க. ஆட்சி நடைபெற்று வந்த ராஜஸ்தானில் காங்கிரஸ் ஆட்சியமைப்பது உறுதியாகியுள்ளது.

 

200 சட்டமன்ற தொகுதிகள் கொண்ட ராஜஸ்தானில் 199 இடங்களுக்கு தேர்தல் நடைபெற்றது. பெரும்பான்மைக்கு 100 இடங்கள் தேவை. இந்நிலையில் தொடக்கம் முதலே முன்னிலையில் இருந்து வந்த காங்கிரஸ் பிற்பகல் நிலவரப்படி 100 தொகுதிகளில் முன்னிலையில் இருந்து வந்தது.

மற்ற கட்சிகளுக்குப் பெரிதும் வாய்ப்பின்மையால் இங்கு காங்கிரஸ் ஆட்சி அமைப்பது உறுதியாகியுள்ளது.

Exit mobile version