எதிர்க்கட்சி அந்தஸ்தை காங்கிரஸ் இழக்கும் காங்கிரஸ்

மக்களவையில் எதிர்க்கட்சி அந்தஸ்தை காங்கிரஸ் இழக்கும் நிலை உருவாகியுள்ளது.

மொத்தமுள்ள 543 மக்களவைத் தொகுதிகளில், குறைந்தபட்சம் 55 இடங்களில் வெற்றி பெற்றால் மட்டுமே எதிர்க்கட்சி என்ற நிலை கிடைக்கும். இந்நிலையில் 39 மக்களவைத் தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி வென்றுள்ளது. 13 மக்களவைத் தொகுதிகளில் காங்கிரஸ் முன்னிலை வகிக்கிறது. மக்களவையில் காங்கிரஸ் கட்சி மொத்தமாக 52 தொகுதிகளில் முன்னிலை பெற்றுள்ளது. எனவே, நாடாளுமன்றத்தில் அங்கீகரிக்கப்பட்ட எதிர்க்கட்சி என்ற அந்தஸ்தை காங்கிரஸ் கட்சி இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

Exit mobile version