சர்ஜிகல் ஸ்டிரைக் முறையில் எதிரி படைகளை அழித்தது குறித்து நாடே பெருமை கொள்ளும் நேரத்தில், காங்கிரஸ் கட்சி வீடியோ ஆதாரம் கேட்பதாக பிரதமர் மோடி குற்றம்சாட்டியுள்ளார்.
ராஜஸ்தானில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டுள்ள அவர், அந்த மாநில முதலமைச்சர் வசுந்தரா ராஜே திறமையாக ஆட்சி நடத்திவருவதாக புகழாரம் சூட்டினார். அப்போது, சர்ஜிகல் ஸ்டிரைக் குறித்து பேசிய அவர், நாடே பெருமைப்படும் விஷயத்திற்கு காங்கிரஸ் ஆதாரம் கேட்பதாக குற்றம்சாட்டினார். தாம் ஒருநாள்கூட ஓய்வெடுத்ததில்லை என்றும், வெளிநாடுகளுக்கு சென்று மறைந்தது இல்லை என்றும் பேசிய பிரதமர் மோடி, தன்னுடைய நடவடிக்கைகள் அனைத்தும் பதிவிடப்பட்டிருப்பதாக கூறினார். இதனிடையே, விவசாயிகள், இளைஞர்கள், வேலைவாய்ப்புகள் குறித்த ராகுல்காந்தியின் கேள்விகளுக்கு பிரதமர் மவுனம் காப்பது ஏன் என்று காங்கிரஸ் மூத்தத் தலைவர் கமல்நாத் கேள்வி எழுப்பியுள்ளார். ராஜஸ்தான் மாநில சட்டப்பேரவையின் 200 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு டிசம்பர் 7-ம் தேதி நடக்கவுள்ளது. இதையொட்டி அங்கு முகாமிட்டுள்ள பிரதமர் மோடி, 10-க்கும் மேற்பட்ட இடங்களில் டிசம்பர் 4-ம் தேதி வரை பிரச்சாரம் மேற்கொள்ளவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Discussion about this post