பொய் வாக்குறுதிகள் மூலம் மக்களை ஏமாற்றும் காங்கிரஸ்

2014ம் ஆண்டு மக்களவை தேர்தலில் 10 பெரிய மாநிலங்களில் சொற்ப இடங்களையே வென்ற காங்கிரஸ் கட்சி, தற்போது பொய் வாக்குறுதிகள் மூலம் மக்களை ஏமாற்ற தொடங்கியுள்ளதாக விமர்சனம் எழுந்துள்ளது. கடந்த 2014ஆம் ஆண்டு மக்களவை தேர்தலில் உத்தரபிரதேசத்தில் உள்ள 80 தொகுதிகளில் 2 தொகுதிகளை மட்டுமே காங்கிரஸ் கைப்பற்றியது. இதேபோல், மகாராஷ்டிராவில் உள்ள 48 தொகுதிகளில் இரண்டையும் மேற்கு வங்கத்தில் உள்ள 42 தொகுதிகளில் 4 தொகுதிகளையும் அக்கட்சி கைப்பற்றியது.

பீகாரில் 2 தொகுதிகளிலும், மத்திய பிரதேசத்தில் 2 தொகுதிகளிலும் கர்நாடகாவில் 9 தொகுதிகளிலும் காங்கிரஸ் வெற்றி பெற்றது. ஆந்திரா, தமிழகம், குஜராத், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் ஒரு தொகுதியில் கூட காங்கிரஸ் வெற்றி பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

10 பெரிய மாநிலங்களில் உள்ள 398 தொகுதிகளில் வெறும் 21 தொகுதிகளில் மட்டுமே அக்கட்சி வென்றிருந்தது. 10 பெரிய மாநிலங்களின் 5% இடங்களை மட்டுமே பெற்று, மக்களால் புறக்கணிக்கப்பட்டு, எதிர்க்கட்சி அந்தஸ்தைக் கூட இழந்த காங்கிரஸ்தான் இப்போது இந்தியாவுக்கு இதைச் செய்வேன் அதைச் செய்வேன் என பொய் வாக்குறுதிகளைக் கொடுத்து, மக்களை ஏமாற்றப் பார்க்கிறது.

Exit mobile version