ஆந்திரா, மேற்குவங்கத்தில் காங்கிரஸ் தனித்து போட்டியிட வாய்ப்பு?

பிரியங்காவின் முழுநேர அரசியல் வருகையால் உற்சாகமடைந்திருக்கும் காங்கிரஸ், ஆந்திரா மற்றும் மேற்குவங்கத்தில் தனித்து போட்டியிட பரிசீலனை செய்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. சில மாதங்களில் நடைபெறவுள்ள மக்களவை தேர்தலில் பாஜகவை வீழ்த்துவதற்காக மெகா கூட்டணியை ஏற்படுத்த பல்வேறு முயற்சிகளை காங்கிரஸ் கட்சி மேற்கொண்டுள்ளது. ஆனால் உத்தர பிரதேசத்தில் அகிலேஷ் மற்றும் மாயாவதியின் புறக்கணிப்பை அடுத்து அங்கு அனைத்து தொகுதிகளிலும் தனித்து போட்டியிட உள்ளதாக காங்கிரஸ் அறிவித்துள்ளது.

இதேபோல மேற்கு வங்கத்தில் தன்னுடைய பலத்தை காண்பிக்க தனித்து போட்டியிட மம்தா பானர்ஜி திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. இதனிடையே சந்திரபாபு நாயுடுவுடன் கூட்டணி வைத்தால் ஆந்திரா, தெலங்கானாவில் பலன்தராது என்று காங்கிரஸ் கருதுவதாக கூறப்படுகிறது. இதனால் ஆந்திரா, மேற்குவங்கத்தில் காங்கிரஸ் தனித்து போட்டியிட வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

Exit mobile version