காங்கிரஸ் ஆட்சியில் வேளாண்மை, விளையாட்டுத் துறையில் கூட ஊழல்: பிரதமர் மோடி

காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் விளையாட்டுத் துறையிலும் வேளாண்மைத் துறையிலும் கூட ஊழல் நடைபெற்றதாக பிரதமர் நரேந்திர மோடி குற்றம் சாட்டியுள்ளார்.

அரியானா மாநிலச் சட்டமன்ற தேர்தலையொட்டி சோனிபத் மாவட்டத்தின் கோகனா என்னுமிடத்தில் நடைபெற்ற பாஜக பிரசாரப் பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டு பேசினார். அப்போது விளையாட்டு, வேளாண்மை, பாதுகாப்பு ஆகிய துறைகளில் அரியானா மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் பெரும்பங்காற்றி நாட்டை பெருமைப்படுத்துவதாகத் தெரிவித்தார். தூய்மை இந்தியா திட்டம், பாகிஸ்தானில் ஊடுருவித் தாக்குதல் நடத்தியது ஆகியவற்றைப் பற்றி பேசும்போது காங்கிரசுக்கு வயிற்று வலி ஏற்படுவதாகக் குறிப்பிட்டார். காங்கிரசின் ஆட்சியில் பாதுகாப்புப் படையினருக்கும், விவசாயிகளுக்கும், விளையாட்டு வீரர்களுக்கும் பாதுகாப்பு இல்லை எனத் தெரிவித்தார். வேளாண்மைத் துறையிலும், விளையாட்டுத் துறையிலும் கூடக் காங்கிரஸ் ஆட்சியில் ஊழல் நடைபெற்றதாகப் பிரதமர் மோடி குற்றஞ்சாட்டினார்.

Exit mobile version