காங்கிரஸ் சோனியா காந்தி சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே உடன் தொலைபேசியில் பேச்சு

மகாராஷ்டிரத்தில் ஆட்சியமைப்பதில் இழுபறி நீடிக்கும் நிலையில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியும், சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரேயும் தொலைபேசியில் பேச்சு நடத்தியுள்ளனர்.

மகாராஷ்டிரச் சட்டமன்றத் தேர்தலில் 105 இடங்களைக் கைப்பற்றித் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்த பாஜக ஆட்சியமைக்க மறுத்துவிட்டதையடுத்து, ஆளுநர் சிவசேனாவுக்கு அழைப்பு விடுத்துள்ளார். சிவசேனாவுக்கு ஆதரவளிப்பது குறித்து மும்பையில் சரத்பவார் இல்லத்தில் தேசியவாத காங்கிரஸ் தலைவர்களும், டெல்லியில் சோனியா காந்தி இல்லத்தில் காங்கிரஸ் தலைவர்களும் சந்தித்துப் பேசினர். அது மட்டுமின்றி மும்பையில் உள்ள விடுதியில் சரத்பவாரை சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே சந்தித்துப் பேசினார். எனினும் காங்கிரசின் நிலைப்பாட்டைப் பொறுத்தே தங்கள் முடிவு அமையும் என சரத்பவார் தெரிவித்து விட்டார். இதையடுத்து மாலையில் சோனியாகாந்தி இல்லத்தில் மகாராஷ்டிர காங்கிரஸ் தலைவர்களுடன் பேச்சு நடைபெற்றது. அப்போது சோனியா காந்தியும் உத்தவ் தாக்கரேயும் தொலைபேசியில் பேச்சு நடத்தியுள்ளனர். ஆட்சியமைக்க காங்கிரசின் ஆதரவை உத்தவ் கேட்டதாகவும், கோரிக்கையைப் பரிசீலிப்பதாக சோனியா தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது.

 

Exit mobile version