காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான ஜெய்பால் ரெட்டி உடல் நலக் குறைவு காரணமாக காலமானார். அவருக்கு வயது 77
உஸ்மானியா பல்கலைக்கழகத்தில் மாணவர் தலைவராக இருந்த ஜெய்பால் ரெட்டி அதன் பின் காங்கிரஸ் கட்சியில் இணைந்து 1970ல் எம்.எல்.ஏ. ஆனார். இதுவரை 5 முறை மக்களவை உறுப்பினராகவும் 2 முறை, மாநிலங்களவை உறுப்பினராகவும் 4 முறை, எம்.எல்.ஏ.வாகவும் அவர் இருந்துள்ளார். ஜெய்பால் ரெட்டியின் மறைவுக்கு குடியரசுத் தலைவர், பிரதமர் உட்பட பலர் இரங்கல் தெரிவித்துள்ளனர். ஹைதராபாத்தில் உள்ள ஜெய்பால் ரெட்டி இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள அவரது உடலுக்கு குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு , நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.