அண்ணா, கருணாநிதி சிலை திறப்பு நிகழ்ச்சி : சோனியா வருகை?

முன்னாள் முதலமைச்சர்கள் அண்ணா மற்றும் கருணாநிதி சிலை திறப்பு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக வரும் 16ஆம் தேதி காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி சென்னை வரவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. சென்னை அண்ணா அறிவாலயத்தில் முன்னாள் முதலமைச்சர்கள் அண்ணா மற்றும் கருணாநிதிக்கு முழுஉருவ சிலை அமைக்கப்பட்டுள்ளது.

வரும் 16ஆம் தேதி நடைபெற உள்ள சிலைகள் திறப்பு விழாவில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி கலந்து கொள்ள இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் வரும் நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவிற்கு எதிரான மதசார்பற்ற கட்சிகளை ஒருங்கிணைப்பது குறித்தும் இந்த பயணத்தின்போது, திமுக உள்ளிட்ட கட்சிகளுடன் அவர் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாக கூறப்படுகிறது.

இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு சோனியாவின் சென்னை பயணம் குறித்து விவாதிக்க வரும் 10ம் தேதி அக்கட்சியின் மாவட்ட தலைவர்களுடன் கட்சித்தலைவர் திருநாவுக்கரசர் ஆலோசனை நடத்த உள்ளதாக தெரிகிறது.

Exit mobile version