புதுச்சேரி சுங்கச்சாவடி ஊழியரை தாக்கிய காங்கிரஸ் பிரமுகர்கள்

புதுச்சேரியில் சுங்கச்சாவடி ஊழியரை தாக்கிய காங்கிரஸ் பிரமுகர்களை போலீசார் கைது செய்தனர்.

சுங்கச்சாவடி மாதாந்திர கட்டண அட்டை காலாவதியான நிலையில், அதனை புதுப்பித்துக்கொள்ள வேண்டும் என்று சுங்கச்சாவடி ஊழியர் கூறியதாக தெரிகிறது. இதனால் கோபம் அடைந்த இளைஞர் காங்கிரசைச் சேர்ந்த சுகுமார், விக்னேஷ், கமல்ராஜ் ஆகியோர் சுங்கச்சாவடி ஊழியரை கடுமையாக தாக்கியதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக ஆரோவில் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்ட நிலையில், சிசிடிவி கேமரா பதிவை போலீசார் ஆய்வு செய்தபோது, அதில், காங்கிரஸ் பிரமுகர்கள், ஊழியரை தாக்குவது தொடர்பான காட்சிகள் இருந்தன. இதையடுத்து சுகுமார், விக்னேஷ், கமல்ராஜ் ஆகியோரை போலீசார் கைது விசாரணை நடத்தி வருகின்றனர்.

Exit mobile version