சிபிஐயின் புதிய இயக்குநர் நியமனத்திற்கு காங்கிரஸ் கட்சி எதிர்ப்பு

சிபிஐயின் புதிய இயக்குநராக ரிஷி குமார் சுக்லா நியமிக்கப்பட்டதற்கு காங்கிரஸ் கட்சி எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

சி.பி.ஐ. அமைப்பின் புதிய இயக்குனராக ரிஷி குமார் சுக்லாவை நியமனம் செய்து மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்நிலையில், சிபிஐ இயக்குநரை நியமிப்பதற்கான தேர்வுக்குழுவில் இடம்பெற்றுள்ள மூன்று நபர்களில் ஒருவரான காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மல்லிகார்ஜுனா கார்கே, ஊழல் தொடர்பான வழக்குகளை விசாரிப்பதில் முன் அனுபவம் இல்லாத ரிஷி குமார் சுக்லா அந்த பதவியில் நியமிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக, பிரதமர் நரேந்திர மோடிக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், பணி அனுபவம், ஒருங்கிணைப்பு மற்றும் லஞ்ச – ஊழல் தொடர்பான வழக்குகளை விசாரிப்பதில் முன் அனுபவம் ஆகிய மூன்று முக்கிய அளவு கோல்களின்படி சி.பி.ஐ. இயக்குனர் பதவிக்கு ஒருவர் தேர்வு செய்யப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டை மத்திய அரசு பின்பற்றவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.

Exit mobile version