ஈரோட்டில் உயர் நீதிமன்ற உத்தரவையும் மீறி காங்கிரஸ் கட்சி பேனர்கள்

ஈரோட்டில் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் இளங்கோவனின் பிறந்த நாள் டிஜிட்டல் பேனர்களை காங்கிரஸ் கட்சியினர் வைத்துள்ளதாக பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். தமிழக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ஈ.வி,கே.எஸ் இளங்கோவன் பிறந்த நாள் நாளை கொண்டாடப்பட உள்ளது. இதற்காக ஈரோட்டின் பல்வேறு இடங்களில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்கள் பேனர்களை வைத்துள்ளனர்.

இவை இடையூறு ஏற்படுத்தும் வகையில் வைக்கப்பட்டுள்ளதாக பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். உயர் நீதிமன்ற உத்தரவையும் மீறி காங்கிரஸ் கட்சியினர் பேனர்கள் வைத்துள்ளதாக அவர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

Exit mobile version