சீக்கியர்கள் கொல்லப்பட்டதை நியாயப்படுத்தும் காங்கிரஸ்-மோடி

சீக்கியர்கள் கொல்லப்பட்டதை நியாயப்படுத்துவதன் மூலம் காங்கிரஸின் உண்மை முகம் வெளியில் தெரிய துவங்கியிருப்பதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

அரியானா மாநிலம் ரோதக்கில் நடந்த பிரசார கூட்டத்தில் பேசிய அவர், ஒரு குடும்பத்திற்கான கட்சி காங்கிரஸ் என்றார். இதனிடையே 1984ஆம் ஆண்டில் சீக்கியர்கள் கொல்லப்பட காரணமாக இருந்தது காங்கிரஸ் என கூறிய பிரதமர் நரேந்திர மோடி, அரியானா, மத்திய பிரதேசம், இமாச்சல், உத்தர பிரதேசம் ஆகிய மாநிலங்களில் ஆயிரக்கணக்கான சீக்கியர்கள் கொல்லப்பட்டதை சுட்டிக் காட்டினார். ஆனால் ராகுலின் குரு நடந்தது நடந்ததாக இருக்கட்டும் என கூறிவதாக தெரிவித்தார். மக்களின் உயிர் காங்கிரசுக்கு சாதாரணமாக போய் விட்டதாகவும் விமர்சித்தார். இந்தநிலையில் பா.ஜ.க நாட்டு மக்களின் நலனில் அக்கறை கொண்டிருப்பதாக கூறிய பிரதமர் நரேந்திர மோடி, ராணுவ வீரர்கள் குறித்து காங்கிரசிற்கு அக்கறை கிடையாது என்று தெரிவித்தார்.

Exit mobile version