கர்நாடகாவில் மீண்டும் இன்று காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம்

கர்நாடகாவில் மீண்டும் இன்று காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடைபெற உள்ளது.கர்நாடகாவில் குமாரசாமி தலைமையில் காங்கிரஸ்-ஜேடிஎஸ் கட்சியின் கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. இந்த கூட்டணி ஆட்சியை கவிழ்க்க பாரதீய ஜனதா கட்சி முயற்சிப்பதாக புகார் எழுந்தது.இதையடுத்து கடந்த சில தினங்களுக்கு முன்பு காங்கிரஸ் கட்சி சார்பில் மாநில காங்கிரஸ் எம்எல்ஏக்களின் கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொள்ளாத 4 எம்எல்ஏக்களுக்கு நோட்டீஸ் அளிக்கப்பட்டுள்ளது.

காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் ராம்நகர் அருகே தனியார் சொகுசு ஓட்டலில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இந்தநிலையில், சொகுசு விடுதியில் தங்கியிருந்த 3 எம்எல்ஏக்கள் இடையில் மோதல் ஏற்பட்டு, ஆனந்த்சிங் என்பவர் காயமடைந்துள்ளதாக கூறப்படுகிறது. அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.பரபரப்பான இந்த சூழ்நிலையில், மீண்டும் இன்று காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெற உள்ளுது. இந்தக் கூட்டத்தில் கர்நாடக காங்கிரஸ் எம்எல்ஏக்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும் என சித்தராமைய்யா அழைப்பு விடுத்துள்ளார்.

Exit mobile version