புதுச்சேரி மாநில அரசு மீது காங்கிரஸ் எம்.எல்.ஏ குற்றச்சாட்டு

புதுச்சேரியில் அடிப்படை வசதிகள் கூட செய்து தராமல் தொடர்ந்து தனது தொகுதி புறக்கணிக்கப்படுவதாக நாராயணசாமி அரசு மீது காங்கிரஸ் எம்.எல்.ஏ குற்றம் சுமத்தி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஊசுடு தொகுதிக்கு உட்பட்ட ராமநாதபுரம் கிராமத்தில் இயங்கி வரும் ஜிப்மர் மருத்துவமனை சாலைகள் அனைத்தும் 5 ஆண்டுகளாக மிக மோசமான நிலையில் உள்ளன. இதனால் நோயாளிகளும் பொதுமக்களும் பெரும் அவதிக்குள்ளாகி வருவதால் சாலைகளை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்களும், சட்டமன்ற உறுப்பினரும் அரசுக்கு பலமுறை கோரிக்கை வைத்துள்ளனர். ஆனால், அரசு கண்டுகொள்ளாததால், புதுச்சேரி பொதுப்பணித்துறை தலைமை அலுவலகத்தை காங்கிரஸ் எம்எல்ஏ தீப்பாய்ந்தான் தலைமையில் கிராம மக்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். நாராயணசாமி அரசு மீது ஆளும் கட்சி எம்எல்ஏ புகார் தெரிவித்து இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Exit mobile version