மகாத்மா காந்தியின் நினைவு தினம்! இனிப்பு வழங்கிய காங்கிரஸ் எம்.எல்.ஏ!

மகாத்மா காந்தியின் நினைவு தினம் நாடு முழுவதும் அனுசரிக்கப்பட்டது. இந்த நிலையில் கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் உள்ள காந்தி சிலைக்கு காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் ராதாகிருஷ்ணன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் தான் கொண்டு வந்த இனிப்புகளை அங்கிருந்த தொண்டர்களுக்கு வழங்கினார். நினைவு நாள் எது? பிறந்த நாள் எதுவென்று கூட தெரியாமல் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் தொண்டர்களுக்கு இனிப்புகளை வழங்கியது பொதுமக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

Exit mobile version