காங்கிரஸ் தலைவர் ராகுலுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் நோட்டீஸ்

பிரிட்டிஷ் குடியுரிமை தொடர்பாக விளக்கம் அளிக்குமாறு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு மத்திய உள்துறை அமைச்சகம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

உத்தர பிரதேச மாநிலம் அமேதி மக்களவை தொகுதியில் வேட்பு மனு பரிசீலனையின் போது ராகுல் காந்தியின் தேசியத்துவம் குறித்து சுயேட்சை வேட்பாளர் கேள்வி எழுப்பினார். இதனையடுத்து ராகுல் காந்தியின் வழக்கறிஞர் அளித்த விளக்கத்தை தொடர்ந்து அவரது வேட்பு மனு ஏற்றுக்கொள்ளப்பட்டது. இந்தநிலையில் ராகுல் காந்தியின் இரட்டை குடியுரிமை குறித்து மத்திய உள்துறை அமைச்சகத்திடம் பாஜக மூத்த தலைவர் சுப்ரமணிய சுவாமி புகார் அளித்தார். அதில் இங்கிலாந்தில் பதிவு செய்யப்பட்டிருக்கும் பேகோப்ஸ் நிறுவனத்தில் ராகுல் காந்தி இயக்குநராக இருப்பதாகவும், இந்த நிறுவனத்திற்காக தாக்கல் செய்த ரிட்டரின் ராகுலின் தேசியத்துவம் பிரிட்டீஸ் என குறிப்பிடப்பட்டிருப்பதாக அவர் சுட்டிக் காட்டியுள்ளார். இதனையடுத்து இரட்டை குடியுரிமை குறித்து 14 நாட்களுக்குள் உரிய விளக்கம் அளிக்குமாறு ராகுல் காந்திக்கு மத்திய உள்துறை அமைச்சகம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இந்த விவகாரம் தேசிய அரசியலில் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.

Exit mobile version