நாட்டின் வளர்ச்சி மற்றும் பாதுகாப்பில் காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணிக்கு அக்கறையில்லை என்று பிரதமர் மோடி விமர்சித்துள்ளார்.
அரியானா மாநிலம் பதேபாத் நகரில் நடந்த கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சிலர், நாகரீகத்தின் எல்லையை மீறி தன்னை மோசமாகவும், அநாகரீகமாகவும் விமர்சிப்பதாக தெரிவித்தார். தன்னை மோசமாக விமர்சிப்பதன் மூலம் காங்கிரசார் அன்பை வெளிப்படுத்துவதை மக்கள் அறிந்துகொள்வதாக அவர் குறிப்பிட்டார். நாட்டின் பாதுகாப்பு மற்றும் வளர்ச்சி குறித்து காங்கிரசோ, அதன் கூட்டணியோ எப்போவாதாவது பேசியது உண்டா என கேள்வி எழுப்பினார். தேர்தலில் வெற்றி பெறப்போவது முடியாது என்பதை காங்கிரஸ் கூட்டணி புரிந்து கொண்டு விட்டதால், 2 கட்ட தேர்தலுக்கு முன்னர் காங்கிரஸ் கூட்டணி விலகிவிட்டதாக பிரதமர் மோடி குறிப்பிட்டார். இதனால், பா.ஜ.க மீண்டும் ஆட்சி அமைப்பது உறுதியாகிவிட்டதாக அவர் தெரிவித்தார்.