உத்தரபிரதேசத்தில் காங்கிரஸ் தனித்து போட்டியிட இருப்பதாக, அதன் தேசிய தலைவர் ராகுல் காந்தி சூசகமாக தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற தேர்தலை ஒட்டி, உத்தரபிரதேசத்தில் சமாஜ்வாடி கட்சியும், பகுஜன் சமாஜ் கட்சியும் கூட்டணி அமைத்துள்ளன. மொத்தமுள்ள 80 மக்களவை தொகுதிகளில் 38 இடங்களில் இக்கட்சிகள் தங்களுக்கான தொகுதிகளை பங்கிட்டு கொள்கின்றன. இருப்பினும், ராகுல்காந்தி மற்றும் சோனியா காந்தி நிற்கும் 2 தொகுதிகளில் மட்டும், போட்டியிட தங்கள் வேட்பாளரை நிறுத்துவதில்லை என சமாஜ்வாடி கட்சியும், பகுஜன்சமாஜ் கட்சியும் அறிவித்துள்ளன. இந்நிலையில் காங்கிரஸ் கட்சி தனித்து நின்று, முழு பலத்துடன் நாடாளுமன்ற தேர்தலை சந்திக்கும் என காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் ராகுல்காந்தி சூசகமாக தெரிவித்துள்ளார். இதனிடையே காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் தேர்தல் நேரத்தில் கூட்டணியில் மாற்றம் ஏற்படலாம் என கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.