கர்நாடகாவில் காங்கிரஸ் – மதசார்பற்ற ஜனதா தளம் இடையே கருத்து வேறுபாடு

கூட்டணி கட்சியான காங்கிரஸ் தங்களை முதுகில் குத்துவதாக கர்நாடக முதலமைச்சர் குமாரசாமி வேதனை தெரிவித்துள்ளார். கர்நாடகாவில் காங்கிரஸ் ஆதரவுடன் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சி கூட்டணி  ஆட்சி நடத்தி வருகிறது. நாடாளுமன்றத் தேர்தலிலும் இந்த கூட்டணி தொடர்ந்து வருகிறது. இதனிடையே செய்தியாளர்களிடம் பேசிய, கர்நாடக முதலமைச்சர் குமாரசாமி, காங்கிரஸ் தலைவர்கள் சிலர் தங்களை முதுகில் குத்துவதாக குற்றம்சாட்டியுள்ளார். தங்களது வேட்பாளர்களின் வெற்றியை தடுக்கும் வகையில் காங்கிரஸ் செயல்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். 

Exit mobile version