திமுகவினர் புறக்கணிப்பதாக காங்கிரஸ் நிர்வாகிகள் புகார்

திமுகவினர் தொடர்ந்து புறக்கணித்து வருவதால் கனிமொழிக்கு ஆதரவாக தேர்தலில் பணியாற்ற போவதில்லை என்று தூத்துக்குடி காங்கிரசார் முடிவு செய்துள்ளனர்.

மக்களவை தேர்தலில் திமுக மற்றும் காங்கிரஸ் கூட்டணி அமைத்து போட்டியிட்டாலும், இரு கட்சி தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகளிடையேயான விரிசல் என்பது அதிகரித்தப்படியே உள்ளது. தூத்துக்குடியில் திமுக சார்பில் அக்கட்சியின் மகளிர் அணி செயலாளர் கனிமொழி போட்டியிடுகிறார். கனிமொழி பிரசாரத்திற்கு காங்கிரஸ் நிர்வாகிகள் அழைக்கப்படுவதில்லை என்றும் தொடர்ந்து காங்கிரஸாரை திமுகவினர் புறக்கணித்து வருவதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில், கோவில்பட்டி காந்தி மண்டபத்தில் காங்கிரஸ் சட்டமன்ற பொறுப்பாளர் திருப்பதி ராஜா தலைமையில் ரகசிய கூட்டம் நடைபெற்றது. இதில், காங்கிரஸ் நிர்வாகிகளுக்கு தகவல் தெரிவிக்காமல் கனிமொழி பிரசாரம் மேற்கொண்டால், அதனை புறக்கணிப்பது என்று முடிவு செய்யப்பட்டது.

Exit mobile version