திமுக-காங்கிரஸ் ஊழல் கூட்டணி என்றும், நதிகளை இணைக்கும் அறிவிப்பிற்கு ரஜினிகாந்த் வரவேற்பு தெரிவித்துள்ளதற்கு தமிழக பாஜக பொறுப்பாளர் பியூஷ் கோயல் நன்றி தெரிவித்துள்ளார்.
சென்னை, தி நகரில் உள்ள பாஜக அலுவலகத்தில், செய்தியாளர்களை சந்தித்த அவர், அடுத்து அமையும் அரசில், தமிழக மக்களின் பங்களிப்பு அதிகம் இருக்கும் என்றார். காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில், நதிகணை இணைக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று குற்றம்சாட்டிய பியூஷ் கோயல், பாஜக தேர்தல் அறிக்கையில் நீர் மேலாண்மைக்கு முக்கியத்துவம் கொடுத்து இருப்பதாக தெரிவித்தார். நீலப்புரட்சி மூலம் மீனவர்களின் வாழ்வாதாரத்தையும், பாதுகாப்பையும் மேம்படுத்துவோம் என்று உறுதியளித்த அவர், நதிகளை இணைக்கும் அறிவிப்பிற்கு ரஜினிகாந்த் வரவேற்பு தெரிவித்ததற்கு நன்றி தெரிவித்தார். திமுகவின் மூத்த நிர்வாகிகள் ஊழல் வழக்குகளை எதிர்கொண்டு வருவதாகவும், திமுக – காங்கிரஸ் ஊழல் கூட்டணி என்றும் பியூஷ் கோயல் குற்றம் சாட்டினார்.