காங்கிரஸ் வேட்பாளருக்கு மக்கள் மரண அடி கொடுக்க வேண்டும்: முதல்வர் பிரசாரம்

நாங்குநேரி தொகுதியில் இடைத்தேர்தல் வர காரணமாக இருந்த காங்கிரசுக்கு மக்கள் மரண அடி கொடுக்க வேண்டும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கேட்டுக் கொண்டுள்ளார்.

நாங்குநேரி தொகுதியில் அதிமுக வேட்பாளர் வெ. நாராயணனை ஆதரித்து 2வது நாளாக அவர் பிரசாரம் மேற்கொண்டார். ஏர்வாடி பகுதியில் திரண்டு இருந்த பொதுமக்களிடையே உரையாற்றிய முதலமைச்சர், நாங்குநேரி இடைத்தேர்தல் வருவதற்கு காங்கிரஸ் வேட்பாளரின் சுயநலமே காரணம் என குற்றம்சாட்டினார். இந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு மக்கள் மரண அடி கொடுக்க வேண்டும் எனவும் முதலமைச்சர் கேட்டுக்கொண்டார். அதிமுக வேட்பாளரும், மண்ணின் மைந்தனுமாகிய நாராயணனுக்கு வாக்களித்து வெற்றி பெறச் செய்தால் பல நன்மைகள் கிடைக்கும் எனவும் அவர் உறுதியளித்தார்.

Exit mobile version