மதிமுக பொதுச் செயலாளர் வைகோவை சிவகங்கை காங்கிரஸ் வேட்பாளர் கார்த்தி சிதம்பரம் உதாசீனப்படுத்தியது மதிமுக தொண்டர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
சிவகங்கை அரண்மனை வாசலில் நடந்த பொதுக்கூட்டத்தில் வைகோ வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது வேட்பாளரின் பெயரை இருமுறை கூறியும் கார்த்திக் சிதம்பரம் எழுந்திருக்காமல் உட்கார்ந்த படியே இருந்தார். இதனால் மதிமுக தொண்டர்கள் அதிர்ச்சியடைந்தனர்.
ஏற்கனவே வைகோவை ராசியில்லாதவர் என்று கூட்டணிக் கட்சியினர் ஓரம் கட்டி வரும் நிலையில், வயதில் மிகவும் இளையவரான கார்த்தி சிதம்பரமும் மதிக்காதது மதிமுக தொண்டர்களை அதிர்ச்சியடையச் செய்தது. மேலும் பொதுமக்கள் ஆதரவும் இல்லாததால் பெரும்பாலான இருக்கைகள் காலியாக கிடந்தன. எப்படி இருந்தவர் இப்படி ஆகிவிட்டாரே என்று மதிமுக தொண்டர்கள் தங்களுக்குள் நொந்து கொண்டனர்.