ரஃபேல் ஒப்பந்தந்தில் டசால்ட் நிறுவனம்தான் ரிலையன்ஸ் நிறுவனத்தை தேர்ந்தெடுத்ததாக, அந்த நிறுவனத்தின் தலைமை நிர்வாக இயக்குநர் எரிக் ட்ராப்பியர் தெரிவித்துள்ளார்.
ரஃபேல் போர் விமான ஒப்பந்தத்தில் 58 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மிகப்பெரிய முறைகேடு நடைபெற்றதாக காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டியது. இந்த விவகாரத்தில் ரிலையன்ஸ் நிறுவனத்தை மத்திய அரசு பரிந்துரை செய்ததாக, பிரான்ஸ் முன்னாள் அதிபர் ஹாலண்டோ தெரிவித்தார்.
இதனால் இந்த விவகாரம் நாடு முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டது. இந்நிலையில் டசால்ட் நிறுவனம் தொழில் ரீதியாக ரிலையன்ஸ் நிறுவனத்திடம் ஒப்பந்தம் செய்து கொண்டதாகவும், இதில் அரசியல் தலையீடு எதுவும் இல்லை என்றும் டசால்ட் நிறுவன தலைமை நிர்வாக இயக்குநர் எரிக் ட்ராப்பியர் தெரிவித்துள்ளார்.
ரிலையன்சுடன் சேர்ந்து மொத்தம் 30 நிறுவனங்களுடன் டசால்ட் நிறுவனம் ஒப்பந்தம் செய்து கொண்டதாகவும் அவர் கூறியுள்ளார்.