திருவாரூர் அருகே நேர்மையான முறையில் விடுமுறை விண்ணப்பம் எழுதிய மாணவனுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.
நாம் ஒவ்வொருவரும் நம்முடைய முதல் கடிதத்தை பள்ளி நாட்களில் எழுதி விடுமுறைக் கடிதமாக எழுதி இருப்போம். அந்த விடுமுறை வேண்டும் என்பதற்காக காய்ச்சல், தலைவலி எனப் பொய்யான காரணங்களைக் கூறி இருப்போம். ஆனால் இதற்கு மாறாக மாணவன் ஒருவன் நேர்மையான காரணத்தைக் கூறி விடுப்புக் கேட்டுள்ளார். அந்த கடிதமும் அதிக அளவில் பகிரப்பட்டு ட்ரெண்ட் ஆனது.
திருவாரூர், மேலராதாநல்லூர் அரசு நடுநிலைப் பள்ளியில் எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவன் தீபக், இவர் கடந்த 18ம் தேதி வகுப்பு ஆசிரியருக்கு விடுமுறைக் கடிதம் எழுதியிருந்தார். அக்கடிதத்தில், ”எனது ஊரில் கபடிப் போட்டி நடைபெற்றது. நான் அங்கு சென்று பார்த்தேன். அதனால், எனது உடல் சோர்வாக உள்ளதால் இன்று மட்டும் விடுப்பு தருமாறு மிகவும் பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்” என்று கூறப்பட்டிருந்தது. இந்த கடிதம் குறித்த அந்த மாணவன் கூறுகையில் .
இந்த கடிதம் குறித்து அப்பள்ளி ஆசிரியர் கூறுகையில் “ஆசிரியருக்கும் மாணவருக்கும் உள்ள இடைவெளியை குறைக்கும் நோக்கில் பள்ளியில் கருத்துச் சுதந்திரப் பெட்டி வைத்திருப்பதாகவும் இதில் மாணவர்கள் விரும்பும் கருத்துகளை எழுதிப் போடலாம். இதன்மூலம் ஆசிரியர் மாணவர் இடைவெளி குறைந்தது. எதையும் பயப்படாமல் நேர்மையாக எங்களிடம் சொல்ல ஆரம்பித்தனர். நேர்மையாக செயல்பட வேண்டும் என்று கற்பித்துவிட்டு அதை உதாசினபடுத்த கூடாது, அது வேறுவித முன்னுதாரணமாக மாறக்கூடும் என்பதற்காக மாணவனின் விடுமுறை கடிததிற்கு ஓப்புதல் அளித்ததாகவும்” அப்பள்ளி ஆசிரியர் தெரிவித்தார்.நேர்மையாக செயல்ப்பட்ட அரசு நடுநிலைப் பள்ளி மாணவனையும் , அப்பள்ளி ஆசிரியர்களை சமூக ஆர்வலர்கள் பலரும் பாராட்டி வருகின்றனர்.