அத்திவரதர் வைபவத்தின் மருத்துவ முகாமில் பணியாற்றிய 934 பணியாளர்களுக்கு பாராட்டு

அத்திவரதர் வைபவத்தில் நடைபெற்ற மருத்துவ முகாமில் ஒரு லட்சத்து 33 ஆயிரம் பேர் மருத்துவ சிகிச்சை பெற்றதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபஸ்கர் தெரிவித்துள்ளர்.

48 நாட்கள் நடைபெற்ற அத்திவரதர் உற்சவத்தில் 46 சிறப்பு மருத்துவ முகாம்களில் பணியாற்றிய மருத்துவர்கள், செவிலியர்கள் உட்பட 934 பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்க தமிழ்நாடு சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் இன்று காஞ்சிபுரம் வருகை புரிந்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், நடைபெற்று முடிந்த அத்திவரதர் தரிசன உற்சவத்தில் மக்கள் நல்வாழ்வுத் துறையின் மூலம் பல்வேறு சுகாதார நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன எனவும் 46 சிறப்பு மருத்துவ முகாம்களில் ஒரு லட்சத்து 39 ஆயிரத்து 640 நபர்கள் பயனடைந்து உள்ளனர் எனவும் தெரிவித்தார். மேலும் இந்த மாதம் இறுதி வரை கோயிலுக்கு உள்ளேயும் கோவிலுக்கு வெளியேயும் சுற்றுப்புற பகுதிகளிலும் நோய் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.

Exit mobile version