நாடு முழுவதும் துர்கா பூஜையை விமரிசையாக கொண்டாடப்படுவதை ஒட்டி, பிரதமர் மோடி மற்றும் குடியரசுத்தலைவர் ராம்நாத்கோவிந்த் ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
குடியரசு தலைவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், “துர்கா பூஜை நன்னாளில் நாட்டு மக்களுக்கு நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன் எனவும், இது தீமையை நன்மை வெற்றி கொண்ட திருநாள் எனவும், துர்காதேவி ஆசிமழை பொழிந்து, நம் வாழ்வில் மகிழ்ச்சியையும், வளத்தையும் கொண்டு வந்து சேர்க்கட்டும்” என்றும் தெரிவித்துள்ளார். மேலும் பிரதமர் நரேந்திர மோடி விடுத்துள்ள வாழ்த்து செய்தியில், “மகாஷ்டமி கொண்டாட்டத்தையொட்டி அனைவருக்கும் இதயம் கனிந்த நல்வாழ்த்துக்கள். துர்காஷ்டமியின் தெய்வமான மகாகவுரி நம் அனைவருக்கும் மகிழ்ச்சியையும், நல் அதிர்ஷ்டத்தையும், வளத்தையும் கொண்டு வந்து சேர்ப்பாராக” என கூறியுள்ளார்.