ஈகைத் திருநாளாம் ரம்ஜான் பெருநாளை மகிழ்ச்சியுடன் கொண்டாடும் அன்பிற்குரிய இஸ்லாமியப் பெருமக்கள் அனைவருக்கும் உளமார்ந்த ரம்ஜான் திருநாள் நல்வாழ்த்துக்களை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
ரமலான் மாதத்தில் இஸ்லாமியர்கள் பகலில் நோன்பிருந்து , ஏழைகளின் பசியாற உணவு அளித்து, அனைவரும் எல்லா நலமும் வளமும் பெற்று இன்புற்று வாழ்ந்திட இறைவனை தொழுது ரம்ஜான் திருநாளை உற்சாகமாக கொண்டாடுவதாக குறிப்பிட்டுள்ளார்.
புனித ரமலான் மாதத்தில் நோன்பு கஞ்சி தயாரிக்க 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பள்ளிவாசல்களுக்கு 5 ஆயிரத்து 145 மெட்ரிக் டன் அரிசியை தமிழக அரசு வழங்கியதையும், 2018ஆம் ஆண்டு முதல் புனித ஹஜ் பயணம் பயணம் மேற்கொள்ளும் இஸ்லாமியர்களுக்கு தமிழக அரசு வழங்கி வரும் மானியத்தை சுட்டிக் காட்டியிருக்கும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி,
இந்த பெருநாளில் உலகில் அன்பும், அமைதியும், சகோதரத்துவமும் தழைத்திட வேண்டும் என்று இறைவனை வேண்டி தன் அன்பிற்குரிய இஸ்லாமியர்களுக்கு ரம்ஜான் திருநாள் வாழ்த்துக்களை கூறிக்கொள்வதாக தெரிவித்துள்ளார்.