காங். தலைவர் ராகுல்காந்தி பேச்சு குறித்து எ.வ.வேலு விமர்சனம்

காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தி அந்தந்த மாநிலத்தின் சூழ்நிலை கேற்றவாறு பேசுபவர்தான் என்று திமுகவின் முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு கூறியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி நாடாளுமன்ற தேர்தலில், திமுக கூட்டணி கட்சி சார்பில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் விஷ்ணு பிரசாத் வேட்புமனு தாக்கல் செய்தார். அப்போது அவருடன் முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு உடன் சென்றார். பின்னர் எ.வ.வேலுவிடம், செய்தியாளர்கள் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, கர்நாடகாவிலும், தமிழகத்திலும் மாறி மாறி பெசுவது குறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், அந்தந்த மாநிலத்தின் சூழ்நிலைக்கேற்றவாறுதான் பேச வேண்டும் என்று கூறினார். இதன் மூலம் காவிரி விவகாரத்தில் திமுக மற்றும் காங்கிரஸ் கட்சிகளின் இரட்டை வேடம் அம்பலமாகியுள்ளது.

Exit mobile version