கன்னியாகுமரியில் பணம் பட்டுவாடா செய்வதில் திமுக-காங்கிரஸ் இடையே மோதல்

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் பகுதியில், பணம் பட்டுவாடா செய்வதில் திமுக மற்றும் காங்கிரஸ் கட்சியினரிடையே மோதல் ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. கன்னியாகுமரி மக்களவை தொகுதியில் அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் மத்திய இணை அமைச்சர் பொன். இராதாகிருஷ்ணன் போட்டியிடுகிறார். இந்த தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் எச். வசந்தகுமார் போட்டியிடுகிறார். அவருக்கு சொந்தமான வசந்த் அன்டு கோ நிறுவனங்கள் மூலம் பணம் பட்டுவாடா செய்யப்படுவதாகவும் இது குறித்து தேர்தல் ஆணையம் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பொன். இராதாகிருஷ்ணன் குற்றம் சாட்டி வந்தார்.

இந்நிலையில் காங்கிரஸ் தேர்தல் அலுவலகத்தில் பணம் பட்டுவாடா செய்யப்பட்டபோது திமுகவினருக்கும் காங்கிரஸுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. தகவல் அறிந்து விரைந்த தேர்தல் பறக்கும் படையினர், திமுக காங்கிரஸ் கட்சியினரின் வாகனங்களை சோதனை செய்தனர். இதனால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Exit mobile version